இந்த வாரமே ஆரம்பம்.. சென்னையையே புரட்டி போட போகும் திட்டம்.. அதுவும் சிட்டி நடுவில்.. அடடா

 சென்னை: போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே 27 மாடிகளைக் கொண்ட பிரமாண்டமான கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் பணிகளில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான கட்டுமானம் தற்போது தொடங்கி உள்ளதாம்.

சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் .



சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையம்: இந்த நிலையில்தான் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான இடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தினமும் பல லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்திற்கு வருகிறார்கள். போதிய இடவசதி இல்லாததால், பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

கட்டிடம் வருகிறது: இங்கு வாகனங்களை நிறுத்துவது போன்ற பிரச்னைகளும் உள்ளன. வரும் ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பது உண்மை. அதே சமீபத்தில் இங்கே சென்ட்ரல் பிளாசா அமைக்கப்பட்டது. இதனால் முன்பை விட இந்த பகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் நடந்துள்ளன. 

இந்த நிலையில்தான், இங்கு 27 மாடி கட்டிடம் கட்ட சிஎம்ஆர்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே 400 கோடி ரூபாய் செலவில் மத்திய சதுக்கம் அல்லது மத்திய சதுக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், ரிப்பன் கட்டிடங்கள், RGGGH மற்றும் பார்க் ரயில் நிலையம் போன்றவற்றை இணைக்க ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்படும். இந்த மையச் சதுக்கத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்

பிரம்மாண்ட திட்டம்: இங்கு, CMRL நிறுவனம், 27 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. சென்ட்ரல் பிளாசா என்பது பயணிகளுக்கு மல்டிமாடல் பயணத்தை எளிதாக்கும் விதமாக காட்டப்படுகிறது. அதாவது மெட்ரோ - ரயில் - பேருந்து இடையே எளிதாக மாறும் விதமாக இந்த பிளாசா காட்டப்படுகிறது. ₹400 கோடி சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தற்போது அங்கே பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது.

தனியார் இந்த கட்டிடத்தை நிர்வகிக்க உள்ளனர். 1,650 பைக்குகள் மற்றும் 600 கார்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய மல்டிலெவல் அண்டர்கிரவுண்ட் வாகன நிறுத்துமிடம் இங்கே தயாராக உள்ளது. வாகனம் நிறுத்தும் இடத்திற்கு மேல் பிளாசா கட்டப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. .

என்ன வசதிகள்: முதலில் 33-அடுக்குக் கட்டிடம் திட்டமிடப்பட்டது, பின்னர் அது 31-அடுக்குக் கட்டிடமாக இரட்டை கோபுரமாக மாற்றப்பட்டது. ஏற்கனவே பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு வடிவமைப்பு 27 மாடிகளாக குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அது இரட்டை கோபுரமாக இல்லாமல் ஒற்றை கோபுரமாக வர உள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளே ஹோட்டல்கள், கடைகள், பொருளாதார மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்கார சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Facebook

Recents