சிறகடிக்க ஆசை: கிரிஷால் முத்துவிடம் மாட்டிய ரோகிணி.. மீனா சொன்ன வார்த்தை! கடைசியில் இப்படி ஆயிடுச்சு

 சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் ஜூன் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணி கிரிஷ்க்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருப்பதை முத்து பார்த்து விடுகிறார். அதனால் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். மறுபக்கத்தில் ரோகினி மீது தான் தப்பு மீனா நல்லவங்க என்பதை வித்யாவும் புரிந்து கொள்கிறார்.


இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா வித்யா வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த கறிக்கடைக்காரரின் குரலை கேட்டு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று வெளியே வர அதற்குள் வித்தியா கறிக்கடைகாரரை அனுப்பி வைத்துவிட்டு அது எங்க ஏரியா கடைக்காரர். கறி கொடுக்க வந்தார் என்று சமாளிக்கிறார்.

sirakkatika asai serial today episode



மறுபக்கத்தில் க்ரிஷ்க்கு ரோகிணி தான் தன்னுடைய அம்மா என்று உண்மையை சொன்ன நிலையில் க்ரிஷ் ஏமா இவ்வளவு நாளா என்கிட்ட உண்மையை சொல்லல, நான் சின்ன வயசுல ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? அதனால்தான் என்கிட்ட உண்மையை சொல்லலையா? என்று கேட்க, ரோகிணி பெரியவங்க தப்பு பண்ணுனதுக்கு நீ தண்டனை அனுபவிக்கிற என்று சொல்கிறார். அதோடு நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் எல்லாம் புரிஞ்சுக்கவ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஸ்கூல்ல எல்லாரும் என்னை அம்மா இல்ல, அப்பா இல்லை என்று கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்கம்மா. நீ வந்து அவங்க கிட்ட என்னன்னு கேளும்மா என்று க்ரிஷ் சொல்ல ரோகிணி இப்போ அதெல்லாம் வந்து கேட்க முடியாது, அதற்கான நேரம் வரும் என்று சொல்கிறார்.


அதற்கு க்ரிஷ் நான் உன்கூடவே இருக்கேன் என்று சொல்ல, ரோகிணி அது கூடிய சீக்கிரம் நடக்கும் அதுவரைக்கும் நான்தான் உன்னுடைய அம்மா என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னதும் க்ரிஷ் யாரிடமும் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எனக்காக ஒன்னும் பண்ணனுமா? எனக்கு நாளைக்கு கட்டு பிரிக்கும்போது நீதான் முன்னாடி வந்து நிற்க வேண்டும். நான் உங்களை தான் முதல்ல பாக்கணும் என்று சொல்ல, ரோகிணி வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்.


பிறகு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அம்மாவையும் க்ரிஷையும் அனுப்பி வைக்கும் இப்போது முத்து வந்துவிட, ரோகினி பேக்கை கொண்டு போய் மறைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல நின்று கொள்கிறார். அப்போது முத்து தான் வாங்கிக் கொண்டு வந்து சாப்பாட்டை கொடுத்துவிட்டு சவாரி முடிந்தது, இனிமேல் வீட்டில் க்ரிஷ் கூட சேர்ந்து விளையாடிட்டே இருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகினி வீட்டில் இருப்பதை பார்த்ததும் ஏன் வேலைக்கு போகலையா? எப்பவும் நீதான முதல் ஆளா போவ என்று கேட்க, ரோகிணி நான் எப்ப போன உனக்கு என்ன என்று கேட்கிறார். பிறகு முத்து சாப்பாட்டை கொடுத்து நீங்க போய் சாப்பிடுங்க என்று க்ரிஷை அனுப்பி வைக்க, ரோகிணி க்ரீஷ்க்கு சாப்பாட்டை ஊட்டி விட, அதை முத்து பார்த்து ஷாக் ஆகி, இது என்ன நடக்குது? என்று கேட்க ரோகிணி எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்யும்போது முத்து இதுதான் கல்லுக்குள் ஈரம் என்று சொல்லுவாங்க போல, இதுவும் நல்லா தான் இருக்கு என்று சொல்லிவிடுகிறார்.


மறுபக்கத்தில் மீனா வித்யாவிடம் தன்னுடைய ஆசை தன்னுடைய குடும்ப சந்தோஷமாக இருக்கணும் அவ்வளவு தான். என்னுடைய அத்தை என்னதான் என்னை பேசினாலும் எனக்கு ஒரு நல்ல மனுஷனை பெற்று வச்சிருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்து வித்யா ரோகினி சொன்ன மாதிரி மீனா மோசமானவங்க கிடையாது, நல்லவங்க என்பதை புரிந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து மீனா வீட்டிற்கு வர முத்து என்ன இவ்வளவு நேரம் என்று கேட்க, வித்யா வீட்டில் பேசிட்டு இருந்தேன் நேரம் போனது தெரியல என்று சொல்கிறார். பிறகு மரோகினி கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி விட்டதை முத்து சொல்ல, இதுல என்னங்க இருக்கு அவங்களும் பொண்ணு தான, அவங்களுக்கும் தாய்மை இருக்கும்ல்ல என்று மீனா பேசிக்கொள்கிறார். பிறகு க்ரிஷ்க்காக தான் வாங்கிட்டு வந்த கண்ணாடியை எடுத்து கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Post a Comment

Previous Post Next Post

Facebook

Recents